உணவு சேவைத்துறையில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கலாம்!

உணவு சேவை துறையில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியம் விரைவில் அதிகரிக்கலாம் என்று மனிதவளத்துக்கான மூத்த அமைச்சர் ஜாக்கி முஹமத் தெரிவித்தார்.

ஆனால், சமையல்காரர்கள், பணியாளர்கள் மற்றும் சமையலறை உதவியாளர்கள் உள்ளிட்ட குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் அதிக ஊதியத்தைக் காணும் வகையில் வாடிக்கையாளர்கள் வெளியே சாப்பிடும்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து – ஓட்டுநர் கைது

Boat Quay, Upper Circular சாலையில் உள்ள Jumbo உணவகத்திற்கு வருகை தந்த பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

உணவு சேவை துறையில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியத்தை மேம்படுத்துவதில் உள்ள தடைகளை நன்கு புரிந்துகொள்ள அவர் பயணம் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், உணவகங்கள், காப்பிக் கடைகள், உணவு விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்த முழுநேர ஊழியர்களில் சுமார் பத்தில் 6 பேர் S$2,033க்கும் குறைவான சம்பளத்தைப் பெற்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைவாக வழங்கியதை ஒப்புக்கொண்ட உரிமையாளர்

படிப்படியான சம்பளத்தை அந்த துறையில் உயர்த்தும் முறையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்ல விரும்பும் பயணிகளுக்கு…