வார் மெமோரியல் பார்க்கில் ஷர்ப்போர்ட் மூலம் உலாவிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Man surfing War Memorial Park
Photo: Malvin Fang/FB

வார் மெமோரியல் பார்க் (War Memorial Park) குளத்தில் ஆடவர் ஒருவர் ஷர்ப்போர்ட் பலகையை கொண்டு நீரில் உலாவியதை பற்றி நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.

தற்போது, அந்த 24 வயது ஆடவர் மீது இன்று திங்கள்கிழமை (செப். 13) நீதிமன்றத்தில் நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 22ன்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆள் பற்றாக்குறை காரணமாக 5 பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தும் நிறுவனம்

கடந்த ஜூலை 18 அன்று வார் மெமோரியல் பார்க் பூங்காவில் நடந்த இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு புகார் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

இதனை சிங்கப்பூர் காவல் படை (SPF) மற்றும் தேசிய பாரம்பரிய வாரியம் (NHB) ஆகியவற்றின் கூட்டு செய்திக்குறிப்பில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோவை அந்த வழியாக சென்றவர் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவேற்றினார்.

அதாவது 20 நிமிட இடைவெளியில், நான்கு முறை அவர் குளத்தில் உலாவ முயன்றதாக மதர்ஷிப் கூறியது.

அதோடாது மட்டுமல்லாமல், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட மேலும் நான்கு நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடந்து வருகின்றன. அவர்கள் ஆடவரின் அந்த செயலுக்கு உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

தினமும் 7 மணி நேரம் தூங்கி… S$30 வரை வெகுமதிகளை தட்டிச்செல்லுங்கள்!