சிங்கப்பூரில் மார்ச் கடைசி இரண்டு வாரங்களின் வானிலை நிலவரம்..!

சிங்கப்பூரில் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் தொடர்ந்து வெப்பமான காலநிலை நிலவும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (மார்ச் 16) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில் வெப்பநிலையானது, சில நாட்களில் 36 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் 4.8% சரிவு..!

கூடுதலாக தினசரி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சிங்கப்பூரின் சில பகுதிகளில், மதிய வேளைகளில் மிதமான முதல் கனமான இடியுடன் கூடிய குறுகிய நேர மழை எதிர்பார்க்கப்படுகிறது.

“ஒன்று அல்லது இரண்டு நாட்களில், இடியுடன் கூடிய மழையானது மாலை வரை நீடிக்கக்கூடும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, மார்ச் 2020-க்கான மழைப்பொழிவு, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Source : CNA

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களுக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil