தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு விசிட்டிங் விசாவில் வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வரும் உறவுகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அறிவுரை.

தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு பல்வேறு காரணங்களுக்காக தினந்தோறும் பல நூற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர். அதில் குறிப்பாக விசிட்டிங் விசா, வேலைவாய்ப்பு விசா அல்லது பிசினஸ் போன்ற விசாகளில் வருபவர்கள் பெரும்பாலும் அதிகம்.

சிங்கப்பூருக்கு விசிட்டிங் விசாவில் புதிதாக வருபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே வேலை செய்தவர்கள் மறுபடியும் விசிட்டிங் விசாவில் வருபவர்களாக இருந்தாலும் சரி, உரிய காரணங்கள் இன்றி வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

உரிய காரணங்கள் இன்றி சிங்கப்பூர் வருபவர்கள், சிங்கப்பூர் விமான நிலையங்களின் ICA அதிகாரிகளால் சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் தங்களுடைய நாட்டிற்கு திரும்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கை காரணமாக, இந்திய மதிப்பில் சுமார் 20,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை நீங்கள் இழக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு உரிய காரணங்கள் இன்றி சிங்கப்பூர் வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், ICA அதிகாரிகளால் சந்தேகத்தின் அடிப்படையில் திரும்பி அனுப்பப்படும் பயணிகளின் கைரேகைகள் மற்றும் முழு விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன, இதன் காரணமாக அவர்கள் மறுபடியும் சிங்கப்பூர் வருவதில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.