சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்..!

Wearing of masks to be made compulsory on public transport: Khaw Boon Wan
Wearing of masks to be made compulsory on public transport: Khaw Boon Wan (Photo: Khaw Boon Wan/Facebook)

பொதுப் போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் சனிக்கிழமை (ஏப்ரல் 11) முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

“சர்க்யூட் பிரேக்கர்” நடவடிக்கையின் போது, பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்யும்போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை தேவை என்று திரு காவ் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மொத்தம் 699 பேர் இந்தியாவில் இருந்து திரும்பினர்..!

சிங்கப்பூரில் புதிய நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் இல்லை, ஆகையால் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பான இடைவெளி கடைபிடிப்பது சாத்தியமான ஒன்று, என்று அவர் குறிப்பிட்டார்.

“ஆனால் இதற்குப் பிந்திய காலத்தில் கூட்டம் திரும்பும்போது பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்வது கடினமாக இருக்கும். நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பர். அது பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவேதான் முகக் கவசம் அணிவது அவசியம்.”

With "Circuit Breaker" (CB) measures in place, trains and buses are not crowded and safe distancing is possible for…

Posted by Khaw Boon Wan on Saturday, April 11, 2020

“அனைத்து பயணிகளும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முகக் கவசம் அணிவது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று நான் நினைக்கிறேன். பொது போக்குவரத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்குவோம்” என்றார்.

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil