போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், அதிகாரிகளைத் தாக்கியதாகவும் வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு

சுபாஸ் நாயருக்கு சிறைத்தண்டனை
Pic: File/Today

பெண் ஒருவர் போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இன்று (அக். 7) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது,

மேலும், அவர் இரண்டு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கி, கோவிட் -19 விதிமுறைகளை மீறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ASPRI-Westlite Papan,Tampines தங்கும் விடுதி உட்பட 4 வெளிநாட்டு ஊழியர் விடுதிகள் கண்காணிப்பு

28 வயதான சீன நாட்டவரான சென் யுவான்யுவான் (Chen Yuanyua), சமையலறை கத்தியை வைத்துக்கொண்டு ஒருவரை காயப்படுத்துவதாக மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனை ஊழல் தடுப்பு புலனாய்வுப் அமைப்பு (CPIB) மற்றும் சிங்கப்பூர் காவல் படை ஆகியவை கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

சந்தேகிக்கப்படும் இரண்டு குற்றங்கள் கடந்த ஜனவரி 8 அன்று நடந்ததாக அதிகாரிகள் கூறினர், அவர் குடிபோதையில் பொது இடத்தில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளன.

கடமையை செய்யவிடாமல், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இரண்டு போலீஸ் அதிகாரிகளின் கால்களில் அவர் உதைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 24 அன்று, நியாயமான காரணமில்லாமல் தனது குடியிருப்பை விட்டு வெளியேறியதன் மூலம் அவர் COVID-19 கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு நாள் கழித்து, Pemimpin டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சென் போலீஸ் அதிகாரிக்கு S$100 லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதே நாளில், அவர் வசிக்கும் இடத்திற்கு வெளியே எட்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடி COVID-19 விதிமுறைகளை மீறியதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவால் புதிதாக மூன்று உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 133ஆக உயர்வு