சிங்கப்பூரில் 5வது மாடியில் இருந்து கீழே குதித்த பெண்… மருத்துவமனையில் அனுமதி

பிளாக் 36 யூனோஸ் கிரசென்ட்டில் 5ஆம் மாடியில் இருந்து விழுந்த 31 வயதான பெண் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இது குறித்து வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது, அந்த பெண் குதிப்பதற்கு முன் ஜன்னலுக்கு வெளியே விளிம்பில் நிற்பதைக் காண முடிகிறது.

சிங்கப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர்களாக 21 முதல் 25 வயதுடைய இளைஞர்கள்!

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 20) மாலை 6.43 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

அதனை அடுத்து விரைந்து வந்த SCDF வீரர்கள், அந்த பெண் 5வது மாடி விளிம்பில் நிற்பதைக் கண்டனர். ஆனால், பாதுகாப்பு லைஃப் ஏர் பேக் தயார் செய்வதற்குள் அவர் கீழ் குதித்தார் என கூறப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அந்த பெண்ணை சாங்கி பொது மருத்துவமனைக்கு SCDF கொண்டு சென்றது.

இதில் 31 வயதான அந்த பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதன் பின்னர் மனநலம் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஒரே இரவில் கோடிஸ்வரனான ஊழியர் – “என் நாட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே வேலைசெய்வேன்” என ஊழியர் பெருமிதம்