சிங்கப்பூரில் 18 பேர் ஒன்றுகூடிய சம்பவம் – ஏற்பாடு செய்தவருக்கு அபராதம்..!

jail-fine-woman-illegal work permit
(PHOTO: Today)

சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டத்தில், 18 நபர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது தனது பிளாட்டுக்குள் நுழைய அனுமதித்த, 32 வயதான காஸ்ஸி ஓங் ஷி ஹாங் (Cassie Ong Shi Hong) என்ற பெண்ணுக்கு இந்த குற்றச்சாட்டின் கீழ் S$4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லையென அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள் ஏற்பட காரணம்..?

தனது காம்பஸ்வேல் கிரசண்ட் பிளாட்டில் வெவ்வேறு வசிப்பிடங்களைச் சேர்ந்த 16 பேர் ஒன்றுகூடிய இரண்டாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் இரவு உணவு, மதுபானம் அருந்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது நெருங்கிய தொடர்பில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெம்பனீஸ், பொங்க்கோல், ஹாவுகாங் மற்றும் புக்கிட் பஞ்சாங் போன்ற இடங்களிலிருந்து மொத்தம் 16 பேர் கடந்த மே 8ஆம் தேதி அந்த பிளாட்டுக்கு வந்ததாகவும், கடைசி நபர் மே 9 அன்று அதிகாலை 1.15 மணிக்கு வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து சோதனை செய்ய திட்டம் – மனிதவள அமைச்சர்..!

அச்சமயம் ஒரே வீட்டில் வசிக்காதவர்கள் ஒன்று கூட தடை இருந்தது. அதனை தொடர்ந்து, காஸ்ஸி அண்டை வீட்டுக்காரர்கள், காவல்துறையினரிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து, காவல்துறையினர் 16 விருந்தினர்களை பிளாட்டில் கண்டுபிடித்தனர்.

COVID-19 ஒழுங்குமுறையை மீறியதற்காக, அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறை, S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அங்கு வந்த விருந்தினர்களுக்கு, இந்த மாத தொடக்கத்தில் S$2,500 முதல் S$3,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : வேலைவாய்ப்பு அனுமதி (EP) மற்றும் S Pass சம்பள அளவுகோல்கள் உயர்த்தப்படும்: மனிதவள அமைச்சகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg