குடியிருப்பு பிளாக்கின் கீழே இறந்து கிடந்த பெண் – போலீஸ் விசாரணை

Woman found death suspected-suicide
Photo Via Mothership

பிளாக் 44 ஓவன் சாலையின் (Block 44 Owen Road) கீழ் பகுதியில் நேற்று (ஜூலை 26) மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் நீல நிற கூடாரம் போட்டு சடலம் மூடப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.

கட்டுப்பாடு தளர்வுகள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே..!

அன்று மதியம் 12:28 மணிக்கு, பிளாக் 44 ஓவன் சாலையில் இயற்கைக்கு மாறான இந்த மரணம் தொடர்பான தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், 93 வயதான மூதாட்டி, பிளாக்கின் அடிவாரத்தில் அசைவில்லாமல் கிடந்துள்ளார்.

பின்னர், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக துணை மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

கூடைப்பந்து உலோக அமைப்பு விழுந்ததில் இளையர் மரணம்