“முதலாலினா இப்டி இருக்கணும்” – வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு இரு தொழில்கள் தொடங்க உதவி செய்த முதலாளி!

woman-helps-domestic-worker-business
Shin Min Daily News

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு இரு தொழில்கள் அமைக்க சிங்கப்பூர் முதலாளி உதவி செய்து வருகிறார்.

பிலிப்பைன்ஸை சேர்ந்த 58 வயதான ஜோசிலின் மோம்பல் என்ற பணிப்பெண் தனது முதலாளி வாங் ஷுஜென் எவ்வாறு ஆதரவளித்தார் என்பதை விவரித்துள்ளார்.

போலியான பண நோட்டுகளை நண்பர் உதவியுடன் தயாரித்த ஆடவருக்கு 5 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் பணிப்பெண் இருந்தபோது படிப்புகளில் அவர் கலந்துகொள்வதற்காகப் பணம் செலுத்தி தனது தொழில்முனைவுக்கு ஆதரவளித்ததாக ஷின் மின் டெய்லி நியூஸிடம் பணிப்பெண் கூறினார்.

முதலாளியான வாங், பணிப்பெண்ணை ஆதரிப்பதாகவும், புரிந்துகொள்வதாகவும், போதுமான சுதந்திரம் தருவதாகவும் பணிப்பெண் பெருமையுடன் கூறினார்.

மேலும், தொடர்ந்து கற்றுக் கொள்ளவும் மேம்படுத்தவும் தன்னை ஊக்குவிப்பதாகவும் மோம்பல் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல், பணிப்பெண் தனது சேமிப்பை கொண்டு மணிலாவில் காண்டோமினியம் வீடு ஒன்றையும் வாங்கியுள்ளாராம். முதலாலினா இப்படி இருக்கணும்.

முதலாளியின் ஊக்குவிப்பு, மேலும் நான் சொந்த தொழிலைத் தொடங்க அவர் அனுமதித்ததற்கும் மிக்க நன்றி என்று பணிப்பெண் கூறினார்.

தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு எனக்கு இதன் மூலம் சுதந்திரமான வருமானம் கிடைக்கும் என்றும் பணிப்பெண் மகிழ்ச்சியுடன் கூறினார்.

பாதசாரி மீது மோதிய பேருந்து – கவனக்குறைவாக இயக்கிய ஓட்டுநர் கைது