திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி தருவதாக கூறி மோசடி

(Photo: today)

திருமணத்திற்கு வரன் அமைத்து தருவதாக கூறி, கோ செங் மு என்ற 56 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஏமாற்றி, சோ சி ஹூய் என்ற 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

கோவிடம் சோ S$50,000 வரை பணம் பெற்று ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் கோ சோயுடைய அம்மாவின் பள்ளி தோழி ஆவார். சோ கடந்த சில வருடங்களாகவே அவரை ஏமாற்றி வந்ததாக தெரியவந்துள்ளது.

ஒருவரின் புகைப்படத்தை காட்டி அவர் வங்கியில் வேலை செய்வதாகவும் நன்கு சம்பாதிப்பதாகவும், உங்களை திருமணம் செய்து கொள்வார் என அந்த பெண்மணியை நம்ம வைத்து அவரிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டுள்ளார்.

இதனை அவர் பல மூடநம்பிக்கை சடங்குகள் மூலம் நடத்தி காட்டுவதாகவும் ஏமாற்றி உள்ளார் என மாவட்ட நீதிபதி கோல் லிங்க தீர்ப்பின் போது பதிவு செய்துள்ளார். அந்த ஆடவர் யார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரசாங்க தரப்பு வழக்கறிஞர் எரிக் ஹூ, கோவின் அப்பாவி தனத்தை பயன்படுத்தி கொண்டு அவரை சோ ஏமாற்றி உள்ளார், அவரின் சேமிப்பு பணம் முழுவதையும் ஏமாற்றி வாங்கிக்கொண்டு, பின் நகைகளை அடமானம் வைத்த பணத்தையும் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு, அவரின் வீட்டையும் ஏமாற்றி விற்க சோ முயற்சித்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வீட்டை விற்க முயற்சித்த போது கோவிற்கு சந்தேகம் வந்து போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

சோவிற்கு 15 மாதம் சிறை தண்டனையும் S$49,600 இழப்பீடும் கோவிற்கு வழங்கும் படி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது 15,000 வெள்ளிகள் செலுத்தி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜூலை 5 முதல் அவர் தண்டனையை ஏற்க வரும்படி உத்தரவு பிரிப்பிக்கப்பட்டுள்ளது.