உட்லாண்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… பூனைகளைப் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

Photo: SCDF Official Facebook Page

 

நேற்று (10/09/2021) காலை 11.10 AM மணியளவில் உட்லாண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பிளாக் 437 உட்லாண்ட்ஸ் தெரு 41-ல் (Block 437 Woodlands Street 41) அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீ விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் (Singapore Civil Defence Force- ‘SCDF’) தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவி செட்டை அணிந்துக் கொண்டு, கீழ்தளத்திற்குள் நுழைந்தனர். அப்போது, அந்த தளத்தில் ஒரு வீட்டில் இருந்து புகை வெளியேறியது. அந்த வீட்டிற்குள் நுழைந்த தீயணைப்பு வீரர்கள் படுக்கையறையில் பற்றி எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.

“சட்டம் மட்டும் இருந்தால் போதாது”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேச்சு…

மேலும், அந்த அறைக்குள் இருந்த இரு பூனைகளையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இருந்து ஆறாவது தளம் வரை வீட்டில் இருந்த சுமார் 10 குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக காவல்துறையினர் வெளியேற்றினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.