உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசை – பயணிகள் கடும் அவதி

Telegram

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டது.

மின்வெட்டு ஏற்பட்டதால் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்.9) அதிகாலையில் குடிநுழைவு அனுமதி சரிபார்ப்பதில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் MRT ரயில் பாதையில் திறக்கப்படவுள்ள 11 புதிய நிலையங்கள் – சிறப்புகள் என்ன?

உட்லண்ட்ஸுக்குப் பதிலாக துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது செல்லவோ முகநூல் பதிவில் ICA அறிவுறுத்தியது.

இதன் காரணமாக, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் One Motoring இணையதளம் மூலம் போக்குவரத்து நிலைமையை சரிபார்க்க வாகன ஓட்டிகளுக்கு ICA அறிவுறுத்தியுள்ளது.

பின்னர் காலை 5.30 மணிக்கு, குடிநுழைவு அனுமதி மற்றும் மின்சாரம் வழக்க நிலைக்கு வந்ததாக ICA குறிப்பிட்டுள்ளது.

கட்டுமான ஊழியரை அடித்து தாக்கிய சக ஊழியர் – இதல்லாம் ஒரு காரணமா ?