சிங்கப்பூரில் பாதசாரியை தாக்கிய ஈ-பைக் ஓட்டுநர் – போலீஸ் விசாரணை..!

Man Punched by E-bike rider
Woodlands e-biker allegedly beats pedestrian, 55, leaving him with broken ribs & damaged vision

சிங்கப்பூரில், 55 வயதான நபர் ஒருவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது ஈ-பைக் ஓட்டுநர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும் அவரது மனைவியும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இரவு 9 மணியளவில் பி.எல்.கே 709 உட்லேண்ட்ஸ் அவென்யூ 7 அருகே பாதசாரிகள் பாதையில் நடந்து சென்றதாக Shin Min Daily News தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: பணியிடங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சகம் கூடுதல் ஆலோசனை..!

அந்த ஈ-பைக் ஓட்டுநர் மற்றொரு பாதசாரியிடம், “இது உங்கள் தாத்தாவின் சாலை ஆ?” என்று கேட்டதாக கூறப்படுகிறது.

பிறகு அந்த ஓட்டுநர் 55 வயதான அந்த நபரை கன்னத்தில் தாக்கியதாகவும், அதன் பிறகு அவர் தரையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவரைத் தடுமாறச் செய்து, தொடர்ந்து தாக்கியுள்ளார். அவரது மனைவி அந்த ஓட்டுனரை விலக்க முயன்றார், ஆனால் அவர் பாதிக்கப்பட்டவரின் விலா எலும்பு, இடுப்பு மற்றும் கீழ் உடல் பகுதியை உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இ-பைக் ஓட்டுனருடன் சுமார் 10 வயது நிரம்பிய அவரது மகனும் இருந்ததாக ஷின் மின் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது இடையில் நிறுத்துமாறு மகன் அவரிடம் பலமுறை கூறியுள்ளார்.

இதையும் படிங்க : புதிய பயண கட்டுப்பாடுகளை தொடர்ந்து 15 பேர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!

ஆனால், அவரின் மனைவி போலீசாரை அழைக்கிறார் என்பதை உணர்ந்ததும், ஓட்டுநர் தனது ஈ-பைக்கில் தனது மகனுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.