உட்லேண்ட்ஸில் கடை ஒன்றில் நகைகளை திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது

(Photo: Google StreetView via Mothership)

சிங்கப்பூரில், 17 வயதுடைய இரண்டு ஆடவர்கள், திருட்டு சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய செய்தி வெளியீட்டில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிப்ரவரி 21ம் தேதி மாலை 5:45 மணியளவில், உட்லேண்ட்ஸ் டிரைவ் 44இல் உள்ள கடை ஒன்றில் இருந்து நகைகளை திருடிவிட்டு இரண்டு பேர் தப்பிச்சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

சிங்கப்பூரில் 11வது மாடி விளிம்பில் ஆபத்தாக விளையாடிய சிறுவன்…

விசாரணைகள் மற்றும் காவல்துறை கேமராக்களின் உதவியுடன், உட்லேண்ட்ஸ் காவல் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்களின் அடையாளங்களை கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து, புகார் கிடைத்த 12 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

மேலும் காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை… 10ம் வகுப்பு மாணவி காதல் பிரச்சனையால் தற்கொலை