உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் கடும் தீ… உள்ளே இருந்த சுமார் 25 ஊழியர்கள்: விரைந்த SCDF

woodlands_industrial_park_fire
SCDF

உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள கிடங்கு கழிவுப் பொருட்களில் தீ ஏற்பட்டது.

நேற்று சனிக்கிழமை (செப். 17) காலை 8.40 மணியளவில் 66 Woodlands Industrial Park இல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்த SCDF தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய தமிழக ஊழியர் – குடும்பத்துடன் செல்லும்போது கொடூர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான சோகம்

இதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த பணியில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) 10 அவசரகால வாகனங்களும் சுமார் 70 தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக அது கூறியுள்ளது.

சுமார் 100 மீ க்கு 100 மீ பரப்பளவு உள்ள மிக உயர்ந்த குவியலில் சுமார் 8 மீ உயரத்துக்கு தீ ஏற்பட்டதாக SCDF பேஸ்புக் பதிவில் கூறியது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சுமார் 25 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பக்கத்து வளாகத்தில் இருந்த சுமார் 90 பேரும் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கான காரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

“சிங்கப்பூருள்ள ஒரு ஆள் வாங்கிப்பாரு… எனக்கு கமிஷன் கெடைக்கும்” – சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய ஆடவர்: போலீசார் விசாரணை