விதிமுறை மீறல்: ஒருவரின் வேலை அனுமதி ரத்து – மேலும் 39 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அபராதம்..!

Coronavirus: Work pass holder banned
Coronavirus: Work pass holder banned from working in Singapore, 39 foreign workers fined for breaching rules (Photo : MOM)

சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகளை மீறியதற்காக வேலை அனுமதி வைத்திருப்பவரின் அனுமதி ரத்து செய்யப்பட்டு, சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சகம் (MOM) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் கடந்த ஏப்ரல் 9 அன்று மாலை வேலைகளை முடித்து, பின்னர் உணவு அருந்திவிட்டு பிறகு நீண்ட நேரத்திற்கு பல்வேறு இடங்களில் தொடர்ந்து சுற்றியுள்ளார். மேலும் அடுத்த நாள் அவர் வசிக்கும் இடத்திற்குத் திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 233 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இந்த சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கை காலத்தில் இது ஒரு வெளிப்படையான மீறலாகும் என்று MOM கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, வேலை அனுமதி உள்ளவர்களுக்கு 39 அபராதங்களை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

தங்களோடு வீட்டில் தங்காத மற்றவர்களுடன் அவர்கள் குழுவாகக் கூடி உடற்பயிற்சி அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று MOM கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம், தேசிய பூங்காக்கள் வாரியம் மற்றும் MOM உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், அவர்களின் வேலை அனுமதியையும் அவர்கள் சார்ந்தவர்களின் அனுமதியையும் ரத்து செய்ய தயங்காது என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பதை ஊழியர்களும் முதலாளிகளும் உறுதிசெய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூடுதலாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil