வேலை அனுமதி உடையவர்கள் வசிப்பிடம் இல்லாமல் வெளியில் உறங்குவதில்லை – மனிதவள அமைச்சு!

No work pass holders found sleeping rough during routine checks
No work pass holders found sleeping rough during routine checks, says MOM (Photo: Today)

தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டபோது, ​​எந்த வேலை அனுமதி (work pass) வைத்திருப்பவர்களும் தெருக்களில் உறங்குவதை கண்டறியவில்லை.

இதனை மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (டிசம்பர் 3) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் முன்பதிவுகள் தொடக்கம்!

வசிப்பிடமில்லா மலேசியர்கள்

மலேசிய செய்தித்தாள் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (NST) சிங்கப்பூரில் வசிப்பிடமில்லா மலேசியர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டதை தொடர்ந்து அமைச்சின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் 22இல் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், ஷாருதீன் ஹேல் ஹெல்மி முகமது நோ (Shahruddin Hael Helmy Mohd Noh) என்பவரின் நேர்காணல் இடம்பெற்றதாக குறிப்பிட்டது.

அதில் சிங்கப்பூரில் 100க்கும் மேற்பட்ட மலேசிய வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் வசிப்பிடம் இல்லாமல், ஒரு அறை அல்லது படுக்கையை கூட வாடகைக்கு எடுக்க முடியாமல் இருப்பதாகவும் கூறினார்.

MOM தொடர்பு கொண்டது

அந்த அறிக்கையைத் தொடர்ந்து, நவம்பர் 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திரு. ஷாருதீனின் கருத்துக்கள் தொடர்பாக தகவல்களைப் பெற்று, அந்த ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமைச்சகம் அவரை தொடர்பு கொண்டது.

ஆனால், அவர் சந்தித்ததாகக் கூறும் ஊழியர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்களை அவரால் வழங்க முடியவில்லை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

திரு. ஷாருதீன், அந்த ஊழியர்கள் எவரிடமும் ஒருபோதும் நேரடியாக பேசவில்லை என்றும் அவர்கள் உண்மையில் வசிப்பிடம் இல்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் ஒப்புக்கொண்டார்.

உதவி வழங்கப்படும்

திரு.ஷாருதீன் குறிப்பிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டதில், வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.

வேலை அனுமதி பெற்றவர்கள் உட்பட திறந்த வெளியில் உறங்கும் நபர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

உயரத்திலிருந்து விழுந்து இறந்த இந்திய ஊழியர் – விசாரணை அதிகாரி விளக்கம்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…