வேலைக்கு ஆட்களை எடுப்பதில் பாரபட்சம்…சுமார் 70 முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகள் ரத்து!

work pass privileges suspended
Work pass privileges suspended for discriminatory hiring (PHOTO: Reuters)

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில், வேலைக்கு ஆட்களை எடுப்பதில் பாரபட்சம் காட்டிய சுமார் 70 முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டில் 35ஆக இருந்த இந்த சலுகை ரத்து, தற்போது குறிப்பிடத்தக்க உயர்வை பெற்றுள்ளதாக சமீபத்திய வேலைவாய்ப்பு தரநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதியைவிட்டு வெளியேறி விமான நிலையத்திற்கு சென்ற இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு

அவர்களில் 43 சதவீதம் பேர், மனிதவள அமைச்சின் (MOM) செயல்திறன்மிக்க தரவு பகுப்பாய்வு மூலம் அடையாளம் காணப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 57 சதவீதம் பேர் மனிதவள அமைச்சு மற்றும் முத்தரப்பு கூட்டணி அமைப்புகளுக்கு (TAFEP) அளிக்கப்பட புகார்கள் மூலம் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த அறிக்கை இன்று வியாழக்கிழமை (நவம்பர் 19) MOM, TAFEP மற்றும் TADM ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும், வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் பாரபட்ச நடைமுறைகள் குறித்து 260 வழக்குகளை அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

இது 2019ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ஒப்பிடுகையில் 160 வழக்குகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளித்த 8 பேரிடம் விசாரணை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…