விதிமுறை மீறல்: 4 பேரின் Work Pass ரத்து – சிங்கப்பூரில் வேலைசெய்ய நிரந்தர தடை!

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் லாசரஸ் தீவில் (Lazarus Island) ஒன்றுகூடிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரின் வேலை அனுமதி (Work pass) அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த தீவில் 12 பேர் கொண்ட குழு COVID-19 விதிமுறையை மீறி ஒன்றுகூடியதாக குற்றம் சாட்டப்பட்டது.

துவாஸ் தீ விபத்து: 3 ஊழியர்கள் உயிரிழப்பு – 5 பேர் ஆபத்தான நிலையில்…

அந்த 4 பேரும் பிரிட்டிஷ் நாட்டவர் என்றும், அவர்களுக்கு நீதிமன்றத்தில் நேற்று (பிப். 24) தண்டனை விதிக்கப்பட்டது என்றும் MOM இன்றைய (பிப். 25) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ், விதிமுறைகளை மீறியதற்காக 4 நபர்களும் சிங்கப்பூரில் வேலைசெய்ய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் லாசரஸ் தீவில் இருந்தபோது பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியதற்காக அவர்களுக்கு தலா S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

PIE நெடுஞ்சாலையில் லாரி, பேருந்து மோதி விபத்து – 12 பேர் மருத்துவமனையில் அனுமதி