சிங்கப்பூரில் வேலை செய்து வரும் Work pass, Work permit வைத்திருப்பவர்களுக்கு புதிதாக தொற்று!

Photo: Freepik

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேருக்கு COVID-19 அடையாளம் காணப்பட்டது.

அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது!

அவர்களில், பிரிட்டன் மற்றும் இந்தியாவிலிருந்து திரும்பிய இரண்டு சிங்கப்பூரர்கள் மற்றும் மூன்று நிரந்தரவாசிகள் அடங்குவர்.

ரஷ்யாவைச் சேர்ந்த work pass வைத்திருப்பவர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த work permit வைத்திருப்பவர் ஆகியோரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர்.

மற்றொரு மூன்று நபர்கள், இந்தியாவில் இருந்து வந்த நீண்டகால வருகை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் பிரிட்டனிலிருந்து வந்த சார்பு அனுமதி வைத்திருப்பவர்.

இந்த 19 நபர்களில், நான்கு குறுகிய கால வருகை அனுமதி வைத்திருப்பவர்களும் அடங்குவர்.

மேலும் நான்கு பேர் இந்தோனேசியாவிலிருந்து வந்த சிறப்பு அனுமதி வைத்திருப்பவர்கள் ஆவர்.

சமூக அளவில் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எந்தவொரு புதிய கிருமித்தொற்றும் பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை 58,422ஆக உள்ளது.

திருச்சி-சிங்கப்பூர் இருவழி செல்லும் பயணிகளுக்கு தினசரி விமானங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…