சிங்கப்பூரில் பணியிடங்களில் தொழிலாளர்களின் திக் திக் நிமிடங்கள் – பாதுகாப்பில் குறையா? ; மனிதவள அமைச்சகம் சோதனை

retrenchments-2024-increase-ntuc-measures

குடும்பத்திற்காக சம்பாதிக்கும் பொருட்டு தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரை நோக்கி பயணிக்கின்றனர்.இந்தத் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் முறையான பாதுகாப்பு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி,சிங்கப்பூரில் பணியிட மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.பெருந்தொற்று தொடங்கிய 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 17 பணியிட உயிரிழப்புகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் பாதியிலேயே 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளது அரசு சாரா நிறுவங்களைப் பற்றி கவலை கொண்டுள்ளது.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் விபத்துகளை ஆராய்ந்தால், பெரும்பாலான தொழிலாளர்கள் உயரத்திலிருந்து விழுவது, தவறான பலகைகளில் அடியெடுத்து வைப்பது மற்றும் அதிக எடையுள்ள இயந்திரங்களால் தாக்கப்படுவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பணியிடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன.பாதுகாப்பினை உறுதி செய்தால் பெரும்பாலான விபத்துகளை தடுக்க இயலும் என்று ஜூலை 4-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அமைச்சர் டான் கூறினார்.

பணியிடங்களில் மரணிக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து மனிதவள அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.என்னதான் இருந்தாலும் மரணிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தின் நிலை விடை பெறா வினாவாகத்தான் நிற்கிறது.