“சிங்கப்பூரில் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதே முக்கிய நோக்கம்” – வேலையிடத்தில் காயமடைவதை தடுக்க புதிய முயற்சி

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

சிங்கப்பூரில் ஏற்படும் வேலையிட காயங்களைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும், மேலும் அதனை பூஜ்ஜியமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வீடியோவை வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) கவுன்சில் அறிமுகப்படுத்தியது.

அனைத்துத் துறைகளிலும் உள்ள முதலாளிகள், ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 1,000ஐ தாண்டிய Omicron பாதிப்பு – வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேருக்கு உறுதி

WSH கவுன்சில் Vision Zero என்ற அந்த வீடியோவை, நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 20) ரிசார்ட்ஸ் உலக மாநாட்டு மையத்தில் நடந்த முதலாவது WSH தலைமைத்துவ மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிட்டது.

முழுமையாக அனிமேஷன் செய்யப்பட்ட அந்த வீடியோ, ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், விபத்துக்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதையும் எடுத்துரைத்தது.

சுமார் 100,000 பேர் VTL வழியாக சிங்கப்பூர் வருகை.. டிக்கெட் விற்பனை 50% குறைக்கப்படும்