வெளிநாட்டு ஊழியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் – கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை!

(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

சிங்கப்பூர் குத்தகைதாரர் சங்கம், சொத்துச்சந்தை மேம்பாட்டாளர் சங்கம், சிங்கப்பூர் கட்டட கழகம் மற்றும் சிங்கப்பூர் பொறியியல் கழகம் ஆகிய அமைப்புகள் அடங்கிய கூட்டு குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, போதிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு ஏற்பாடுகளுடன், வெளிநாட்டு ஊழியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என கட்டட கட்டுமான துறை பிரதிநிதியை கேட்டுக்கொண்டுள்ளனர் .

தற்சமயம் உருமாறிய கோவிட்-19 பரவலால் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதில் ஒன்றாக, எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவ்வாறாக எல்லைகள் மூடப்பட்டிருந்தால், ஊழியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், இந்த சூழ்நிலை தொடர்ந்தால் என்ன பாதகங்கள் ஏற்படும் என குழு விளக்கியுள்ளது.

ஆயுதத்துடன் தன்னை தானே பூட்டிக்கொண்ட ஆடவர் மனநல சட்டத்தின்கீழ் கைது

கட்டிட துறையில் பல விதமான வேலைகள் உள்ளன, அதனை மேற்கொள்ள ஊழியர்கள் தேவை.

ஊழியர்கள் பற்றாக்குறையால், பணியில் எஞ்சி உள்ள ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது.

வேலைச்சுமை கூடியதால், அவர்களின் பாதுகாப்பு இங்கு கேள்வி குறி ஆகியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களின் வேலை அனுமதி முடிந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதால், அவர்களின் பணியை தொடர அதற்கான இடங்களை நிரப்ப வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதில், விரைந்து நடவடிக்கை எடுக்க தவறினால் 18,000க்கு மேற்பட்ட நிறுவனங்களும், பல்லாயிர கணக்கான ஊழியர்களையும் கொண்ட கட்டுமான துறை பாதிப்பிற்கு உண்டாகும் என குழு எச்சரித்துள்ளது.

மேலும், தனியார் மற்றும் அரசாங்க வீடுகளை வாங்கி உள்ளவர்கள், அதற்காக போதிய காலம் காத்திருக்க வேண்டும் எனவும், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் எம்ஆர்டி போன்ற பொது திட்டங்களும் தாமதமாகலாம் என குழு தெரிவித்துள்ளது.

ஆகவே, வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பாதுகாப்பான முறையில் நாட்டுக்குள் அழைத்து வர அரசாங்கத்துடன் இணைத்து பணியாற்றுவோம் எனவும், நிதி தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க கட்டுமான துறைக்கு உதவிகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கும் படி அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

குறைந்த ஊழியர்களை கொண்டு செயல்படுத்தக்கூடிய நவீன கட்டுமான முறைகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என குழு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூருக்குள் நுழைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை விதிக்கலாமே? என்ற கேள்விக்கு மனிதவள அமைச்சத்தின் பதில்