அதிக ஊதியம் தருவதாக கூறியும், வேலைக்கு வர ஊழியர்கள் இல்லை!

(Photo: Mothership)

கொவிட்-19 தொற்று பரவலால் அனைவரின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.

எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு ஊழியர்களின் வருகையும் குறைந்துள்ளது. இதனால், வேலைகள் நடப்பதில் பெருமளவு தொய்வு காணப்படுகிறது.

அதிக ஊதியம் தருவதாக அறிவித்தும் உணவு, பானக் கடைகளுக்கு ஊழியர்கள் வர தயங்குவதாக தெரிகிறது.

20% முதல் 30% வரை ஆள்பற்றாக்குறை நிலவுவதாக சிங்கப்பூர் உணவகச் சங்கம் தெரிவித்துள்ளது. இது போன்ற சேவை துறைகளில் 35% அளவிலேயே வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள முடியும்.

இவை நீண்ட நேர பணி என்பதாலும் வேலை பளு அதிகம் இருக்கும் என்பதாலும், இது போன்ற வேலைகளுக்கு செல்ல சிங்கப்பூரர்கள் தயங்குவதாக நெக்ஸ்ட் வாழ்க்கைத்தொழில் ஆலோசனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பால் ஹெங் குறிப்பிட்டார்.