சிங்கப்பூரில் இவர்களுக்கு பாதுகாப்பு கிடையாதா ? – மீண்டும் உயிரிழந்த தொழிலாளி;உறுதிப்படுத்திய MOM

workers safety in singapore mom labour death fatality place

சிங்கப்பூரில் ஜூலை 20 அன்று 55 வயதான தொழிலாளி ஒருவர் படகிலிருந்து தவறி விழுந்து,படகிலுள்ள மோட்டாரின் ப்ரொப்பல்லரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள கெப்பல் துறைமுகத்திற்கு அருகில் உள்ள புலாவ் பிரானி தீவில் நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) கவுன்சில் தலைவர் John Ng என்பவரால் ​​ஜூலை 27 அன்று நடைபெற்ற WSH விருதுகள் 2022க்கான உரையின் தொழிலாளியின் மரணம் வெளிப்படுத்தப்பட்டது.தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மனிதவள அமைச்சகம் (MOM) விபத்து காலை 11 மணியளவில், 11 பிரானி வேயில் நடந்ததாக ஊடங்கங்களிடம் உறுதிப்படுத்தியது.மரணித்தவர் பயிற்சி நிறுவனமான சிட்டாடெல்லின் ஊழியர் என்றும் அவர் படகில் தனியாக இருந்ததாகவும் MOM பகிர்ந்துகொண்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த துணை மருத்துவர்,தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்.பின்பு,காலை 11:20 மணியளவில் சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

கடலில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் இந்தாண்டில் மட்டும் மூன்றாக பதிவாகியுள்ளது.தற்பொழுது,இந்தாண்டு வேலையிட மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.இந்தாண்டு மே மாதம் பிரதமர் லீ சியென் லூங்,பணியிட மரணங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

2021 இல் 37 பணியிட மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில்,இந்தாண்டின் 7-அவது மாதத்திலேயே பணியிட மரணங்களின் எண்ணிக்கை 30-ஐக் கடந்து விட்டது என்பது வருத்ததிற்குரியதாகும்.