கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை படிப்படியாக உயர்த்த நடவடிக்கைகள்…!

(photo: mothership)

சிங்கப்பூரில் 2009 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கடைநிலை ஊழியர்களில் 20% ஊழியர்களின் ஊதியம் 39% கூடியது, அதே வேளையில் இடைநிலை ஊழியர்களின் ஊதியம் 33% மட்டுமே உயர்ந்துள்ளது.

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களிடத்தில் கடந்த ஆண்டு கொவிட்-19 பரவல் பெரும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அரசாங்கம் மேற்கொண்ட திட்டங்கள் நிலைமையை சற்று சரி செய்ய உதவியதாகவும், மேலும் அவர்களில் ஊதியத்தை கிருமி தொற்றுக்கு முன்பிருந்த அளவிற்கு கொண்டு வர முடிந்ததாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், குறைந்த வருமான ஊழியர்களுக்கு படிப்படியான ஊதிய உயர்வு மற்றும் வேலைநலன் போன்ற கொள்கைகளால் இவை சாத்தியமானது என அவர் தெரிவித்தார்.

பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள பல நாடுகளை காட்டிலும் ஊழியர்களுக்கு வருமான உயர்க்கு அதிகம் என திரு ஸாக்கி தெரிவித்தார்.

துப்புரவு, பாதுகாவல், நிலப்பராமரிப்பு துறைகளில் கட்டாயமாக்கப்பட்ட படிப்படியான ஊதிய உயர்வால் 85,000 ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை உணவு சேவைகள், சில்லறை விற்பனை, கழிவு பராமரிப்பு ஆகிய துறைகளில் நடைமுறை படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக திரு ஸாக்கி தெரிவித்தார்.

2007 முதல் குறைந்த வருமான ஊழியர்களுக்கு வேலைநலன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது.

துப்புரவாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 2023 முதல் 2028 வரை படிப்படியாக உயர்த்த கடந்த மாதம் முத்தரப்பு குழுவின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இதன்படி, 2022ல் சிங்கப்பூர் S$1,312ஆக இருக்கும் பொது, உள்ளரங்கத் துப்புரவாளர்களின் அடிப்படை ஊதியம் 2023ல் முதற்கட்டமாக சிங்கப்பூர் S$1,570ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.