ஊழியர்களின் போக்குவரத்து முறைகளில் மாற்றம், கட்டுமான துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அமைச்சர் விளக்கம்

(photo: mothership)

ஊழியர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் முறை தொடர்பான விதிமுறைகளை தற்சமயம் மாற்றி அமைப்பதால், கட்டுமான துறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேலைகள் தாமதமாகும் வாய்ப்புகள் அதிகம் எனவும், வேலையிழப்புகள் கூட நேரிடும் ஆபத்து உள்ளதாகவும் போக்குவரத்துக்கு மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு S$3.2 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்பிய சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம்

ஊழியர்களை அழைத்து செல்ல மாற்று வழியாக லாரிக்கு பதிலாக வேனில் ஏற்றி செல்வது, லாரிகளில் இருக்கை வார் அமைப்பது போன்ற பல திட்டங்களை பணிக்குழு பத்தாண்டுகளுக்கு முன்னரே பரிசீலித்ததாகவும் அவை சில காரணிகளால் தள்ளி போய்க்கொண்டு இருப்பதாக அமைச்சர் ஏமி கூறினார்.

ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி படுகாயங்கள், உயிரிழப்புகள் என அண்மையில் பதிவான சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் டாக்டர் கோரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் ஆகிவற்றுடன் அரசாங்கம் சேர்ந்து செயல்படும் எனவும், அதற்கான செலவுகள், நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் போற்றவற்றால், ஊழியர்களின் போக்குவரத்து தொடர்பாக கடந்த பத்து வருட காலமாக எந்த ஒரு பெரிய மாற்றமும் செயல்படுத்தப்படாமல் இருந்தது என தெரிவித்தார்.

ஊழியர்கள் ஓவ்வொருவரின் உயிரும் முக்கியம், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் அதிகம், அவர்களை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு அதை தக்கவைத்துக்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இதற்காக பல நிலைகளில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும், பல பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என அமைச்சர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் ஒருசேர மேம்படுத்த சமநிலையுடன் ஒரு தீர்வை கண்டறிய வேண்டும் என டாக்டர் கோர் தெரிவித்துள்ளார்.

2011க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது உயிர் இழப்புகள் லாரி பயணத்தின் போது ஏற்பட்டதாகவும், 2016க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் அது 2.6 விகிதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் குறித்து டாக்டர் கோர் பகிர்ந்துகொண்டார்.

இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை…!