பணியாளர்கள் கொளுத்தும் வெயிலில் வேலை செய்ய அரசு தடை – சிங்கப்பூரில் எப்போது?

சவுதி அரேபியாவில் பணியாளர்கள் கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்க அரசால் விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பகல் 12 மணி முதல் 3 மணிவரை வெளி இடங்களில் நடைபெறும் வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதற்கான உத்தரவு இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுகிறது.

கட்டுமானம், மீன்பிடி தொழில், துப்புரவு பணி, சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கொளுத்தும் வெயில் நேரத்தில் தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொழிலாளிகளின் உடல்நிலையை கருத்தில்கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.

இது போன்ற உத்தரவுகள் மற்ற நாடுகளிலும் கடை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த சூழலில் சிங்கப்பூரிலும் இது போன்ற நடைமுறை அமலுக்கு வந்தால், கட்டுமான ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமம் குறையும் என லிட்டில் இந்தியா பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசினார்.

நான் பெரிய வேலையில் இருப்பதாக சொந்த ஊரில் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே வெயிலில் படும் அவஸ்தை அவர்களுக்கு தெரியாது என வேதனையுடன் கூறினார்.