சிங்கப்பூரில் இம்மாதம் வேலையிட விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு

(Photo: SCDF/FB)

சிங்கப்பூரில் கடந்த மூன்றரை வாரங்களில் வேலையிட விபத்துக்களில் சிக்கி மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

துவாஸில் உள்ள தொழில்துறை கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு ஆளான 3 ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 25) உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து இந்த மாதம் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

விதிமுறை மீறல்: 4 பேரின் Work Pass ரத்து – சிங்கப்பூரில் வேலைசெய்ய நிரந்தர தடை!

துவாஸ் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் உதவி தலைமை செயலாளர் மெல்வின் யோங் (Melvin Yong) சமீபத்தில் ஏற்பட்ட வேலையிட விபத்துக்கள் குறித்து கவலையை தெரிவித்தார்.

பாதுகாப்பு நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த சமீபத்திய மரணங்கள் அனைத்தும் மனிதவள அமைச்சகத்தால் (MOM) விசாரிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் “சர்க்யூட் பிரேக்கர்” கால கட்டத்திலிருந்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக கவலை தெரிவித்தார்.

தேவைப்பட்டால், இந்த விபத்துக்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகளை விதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

துவாஸ் தீ விபத்து: 3 ஊழியர்கள் உயிரிழப்பு – 5 பேர் ஆபத்தான நிலையில்…