வேலையிடத்தில் இறந்துகிடந்த ஆடவர் – ஒருவர் கைது

worksite death
Photo: Stomp

15 Pioneer Crescentல் உள்ள வேலையிடத்தில் வெள்ளிக்கிழமை காலை (அக். 1) 49 வயதான ஆடவர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாம்ப் ஊடகத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, காலை 8.59 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஊழியர்களை ஏற்றிசென்ற லாரி டாக்ஸியில் மோதி விபத்து – காணொளி

அதன் பின்னர், அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக துணை மருத்துவர் ஒருவர் உறுதி செய்தார்.

இந்நிலையில், மரணத்தை ஏற்படுத்தியதாக 42 வயதான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலையட் கண்டெய்னர் சர்வீசஸ் (Allied Container Services) யார்ட் 8ல் நடந்த இந்த சம்பவம் குறித்து ஸ்டாம்ப் ஊடகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கொள்கலனை தூக்கும் கிரேன் அருகில் சடலம் கிடக்கும் புகைப்படத்தையும் அது பகிர்ந்துள்ளது.

இறந்தவர் ஓட்டுனரா அல்லது ஆய்வாளரா என்பது தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

வேன் மீது மோதி விபத்தில் சிக்கிய ஆடவர் – உதவிக்கு ஆம்புலன்ஸை அழைத்த ஆப்பிள் வாட்ச்