சிங்கப்பூரில் 95% அதிகமான வேலையிடங்களில் பாதுகாப்பு மீறல்கள் கண்டுபிடிப்பு

(Photo: TODAY)

மனிதவள அமைச்சகம் (MOM) மேற்கொண்ட ஆய்வில் 95 சதவீதத்திற்கும் அதிகமான வேலையிடங்களில் பாதுகாப்பு மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து, சுமார் 510 ஆய்வுகளை அமைச்சகம் நடத்தியுள்ளது. அதில் மொத்தம் 486 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிங்கப்பூரில் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ள நிறுவனம்!

மேலும், ஏழு வேலை நிறுத்த உத்தரவுகளை பிறப்பித்தது என்று மனிதவள மூத்த அமைச்சர் ஜாக்கி முகமது இன்று (மார்ச் 3) தெரிவித்தார்.

இந்த உத்தரவு நேரங்களில், கட்டுமான நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் மறுஆய்வு செய்யப்படுகின்றன.

மேலும், இதில் கட்டமைப்புகளின் நிலைத்தன்மை சரிபார்த்தல், அத்துடன் இயந்திரங்கள், மின் நிறுவல்கள் மற்றும் பொருட்களின் சேமிப்பு மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதும் அடங்கும்.

சமீபத்திய வேலையிட விபத்துக்கள் குறித்து MOM கவலைகொண்டுள்ளது. ஒவ்வொரு சம்பவத்தையும் அமைச்சகம் விசாரித்து வருகிறது, என்று திரு ஜாக்கி கூறினார்.

“எல்லை நடவடிக்கை மற்றும் தொற்று காரணமாக நிறுவனங்கள் மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்வதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ”

ஆயினும்கூட, நிறுவனங்கள் அவசரமாக அல்லது பயிற்சி பெறாத ஊழியர்களை பணிகளை மேற்கொள்ளசொல்வது போன்றவை கூடாது என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இனி இவர்களுக்கு Work Pass அனுமதி விண்ணப்பிப்பு கட்டாயம்!