உலகில் மிக பெரிய சமூக வலைதளங்கள் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பல பில்லியன் மக்கள் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை நொடிக்கு நொடி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் சில நொடி கோளாறு ஏற்பட்டால் கூட அது ஒட்டுமொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க செய்து விடும்.

அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் இந்த சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவை ஒரு அங்கமாக மாறிவிட்டது என்றே குறிப்பிடலாம்.

இந்நிலையில், நேற்று மாலை உலகம் முழுவதும் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயக்கமாமல் கோளாறு ஏற்பட்டது.

குறிப்பாக பேஸ்புக், இஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் இந்த கோளாறு காரணமாக புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், வாட்ஸ்அப் மூலம் பேசி அனுப்பும் செய்தியும் பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை உருவானது.

அதன் காரணமாக பயனாளர்கள் கடுமையான அவதியை சந்தித்தனர். பல மணி நேரம் இந்த தடங்கள் நீடித்தது. தற்போது அந்த சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டு அனைத்து தளங்களும் வழக்கம் போல் இயங்கி வருகிறது.