சிங்கப்பூரில் உருவாகவிருக்கும் உலகிலேயே முதல் தண்ணீரில் மிதக்கும் Apple ஸ்டோர்..!

World’s first floating Apple store to open 'soon' at Marina Bay Sands
World’s first floating Apple store to open 'soon' at Marina Bay Sands (PHOTO: Apple)

Apple ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு இன்பச் செய்தி. சிங்கப்பூரில் தனது 3வது கடையை விரைவில் திறக்க உள்ளது Apple நிறுவனம்.

அதுவும் உலகிலேயே தண்ணீரில் மிதக்கும் முதல் Apple கடை என்ற சிறப்புடன் அது உருவாக உள்ளது. இது மெரினா பே சாண்ட்ஸில் அமையவிருக்கிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்..!

மெரினா பே சாண்ட்ஸ் அருகே மிதக்கும் ஒரு பந்து போன்று அது உருவாகும், முன்பு 2011 முதல் 2016 வரை Avalon இரவு விடுதி அங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ், படைப்பாற்றலின் மையமாக இருக்கும் என்றும், யோசனைகளையும் ஆர்வங்களையும் ஊக்குவிக்கும் இடமாக இதை உருவாக்கியுள்ளதாகவும் Apple நிறுவனம் கூறியுள்ளது.

புதுமையை ஆராய்வதற்கும், இணைப்பதற்கும், உருவாக்குவதற்கும் இது ஒரு இடமாக இருக்கும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 2017ஆம் ஆண்டு, முதல் Apple கடை ஆர்சர்ட் ரோட்டில் உள்ள மாலில் திறக்கப்பட்டது. அதே போல 2வது கடை கடந்த ஆண்டு ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் திறக்கப்பட்டது.

இந்த 3வது கடை எப்போது திறக்கப்படும் என்பது உள்ளிட்ட எந்த ஒரு கூடுதல் விவரங்களையும் Apple நிறுவனம் வெளியிடவில்லை.

இதையும் படிங்க : கிருமித்தொற்று பாதித்த ஊழியர்கள் பணிபுரிந்த 20 கட்டுமானத் திட்டங்களுக்கு பாதுகாப்பு நேரம் – BCA..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg