உலகில் மிக ஆற்றல் மிக்க பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் முதலிடம்.!

The title for the world’s most powerful passport belongs to Singapore and Japan, as both countries are tied at number one with visa-free/ visa-on-arrival entry to 189 countries.

உலகில் மிக ஆற்றல் மிக்க சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்டுள்ள நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகில் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் அல்லது அந்தந்த நாடுகளின் விமான நிலையத்தில் இறங்கிய பிறகு விசா பெற்றுக்கொள்ளலாம்.

Henley Passport Index சமீபத்திய அறிக்கையில் இந்த பட்டியலை ஜூலை 4 ஆம் தேதி வெளியிட்டது.

இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது, அச்சமயம் ஜப்பான் முதலிடத்தில் இருந்தது.

தென்கொரியா, பின்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன.

கடந்த ஆண்டில் 79 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 86 ஆவது இடத்தில், அதாவது 7 இடங்கள் பின்தங்கியுள்ளது.