சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் 3,500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்காணிப்பு சாதனங்கள்..!

More than 3,500 electronic wristband devices issued
(Photo: Seithi)

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றும் 3,500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்காணிப்புச் சாதனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக குடிநுழைவுச் சோதனை சாவடி ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

தற்போதைய விதிகளின் கீழ், சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் இல்லாமல் வேறு இடங்களில் கட்டாயத் தங்கும் உத்தரவில் உள்ளோர் இந்த சாதனங்களை அணிய வேண்டும். இந்த முயற்சி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் PWS பொது எச்சரிக்கை ஒலி குறித்த அறிவிப்பு..!

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள், வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் இது பொருந்தும் என்று ICA, மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் கல்வி அமைச்சகம் (MOE) முன்பு கூறியிருந்தது.

12 வயது மற்றும் அதற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட வசிப்பிடத்திலிருந்து வெளியேற அல்லது அந்த சாதனத்தை சேதப்படுத்த முயன்றால் ICAக்கு எச்சரிக்கை அனுப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 5 – 10 சதவீத மக்கள் அதனை பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு அல்லது சாதனத்தை சேதப்படுத்தியவர்களுக்கு, S$10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட் – தூதரகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts