“வூஹான் வைரஸ்” சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பாதிக்குமா..? அமைச்சர் சான் சுன் சிங் விளக்கம்..!

Wuhan virus expected to impact Singapore’s economy: Chan Chun Sing (PHOTO: Straits Times)

Wuhan virus expected to impact Singapore’s economy : வூஹான் வைரஸ் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

திடீரென்று பரவிவரும் வூஹான் கொரோனா வைரஸ் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும், மேலும் சுற்றுலா தொடர்பான துறைகள் “உடனடி அக்கறை கொண்டவை” என்றும் அமைச்சர் சான் சுன் சிங், திங்கள்கிழமை நேற்று இதனை (ஜனவரி 27) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர்…!

இதில் விருந்தோம்பல் தொடர்பான நிறுவனங்களான ஹோட்டல் மற்றும் டிராவல் ஏஜெண்ட்ஸ் மற்றும் F&B, சில்லறை மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளும் அடங்கும், என்றும் கூறியுள்ளார்.

“வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கண்ணோட்டத்தில், இந்த ஆண்டில் பொருளாதாரம், வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றில் தாக்கம் இருக்கும் என்று நாங்கள் நிச்சயம் எதிர்பார்க்கிறோம், குறிப்பாக இந்த நிலைமை சில காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று திரு சான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வூஹான் கிருமித் தொற்று – நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

கூடுதலாக, “2003 ஆம் ஆண்டில் SARS பரவியபோது வர்த்தகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஆதரவு வழங்கப்பட்டது, அதே போல இந்த இக்கட்டான நேரத்தில் ஆதரவளிக்கப்படும்” என்றார்.