வூஹான் வைரஸ்; மேலும் மூன்று பேரை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்…!

Wuhan virus: 3 new cases confirmed in Singapore, bringing tally to 13

Wuhan virus – 3 new cases confirmed in Singapore : சிங்கப்பூரில் மேலும் மூன்று பேர் இந்த வூஹான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதனுடன் சிங்கப்பூரில் வூஹான் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 13 என்று சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (ஜனவரி 30) உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 4 முகமூடிகள்..!

சமீபத்திய இந்த மூவரில் ஒருவர் வூஹானைச் சேர்ந்த 31 வயதான சீனப் பெண், மேலும் இவர் கடந்த ஜனவரி 22 அன்று சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் சிங்கப்பூரில் நான்காவதாக வூஹான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவருடன் பயணம் செய்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து, 12வது நபர் வூஹானைச் சேர்ந்த 37 வயதான சீனப் பெண் ஆகும், இவர் ஜனவரி 22 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் வந்தடைந்தார்.

மேலும், 13வது உறுதிப்படுத்தப்பட்ட நபர் இவரும் வூஹானைச் சேர்ந்த 73 வயதான சீனப் பெண்மணி, கடந்த ஜனவரி 21ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூர் வந்தடைந்தார். வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவர் கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட்டது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஆலோசனை..!

மூன்று புதிய நபர்களும் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) தனிமைப்படுத்தப்பட்ட அறைகளிலும், சீரான நிலையிலும் உள்ளனர் என்று MOH தகவல் கூறியுள்ளது.

மேலும், “முன்னர் அறிவிக்கப்பட்ட 10 நபர்களை பொறுத்தவரை, யாரும் நோயினால் மோசமாக பாதிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் சீரான நிலையில் உள்ளனர், பெரும்பாலானோர் தேறி வருகின்றனர்” என்று அமைச்சகம் கூறியுள்ளது.