கவனக்குறைவாக லாரியை ஓட்டி, பாதசாரி மீது மோதிய ஓட்டுநர் கைது!

Yuan Ching Road careless driving
(PHOTO: Singapore Uncensored)

யுவான் சிங் (Yuan Ching) சாலை மற்றும் யுங் குவாங் (Yung Kuang) சாலை சந்திப்பில் பெண் பாதசாரி ஒருவர் மீது மோதியதாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன. 12) இரவு 8:28 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சட்டவிரோத கும்பல் என்ற சந்தேகத்தில் மேலும் 6 பேர் கைது!

இதில் 52 வயதான அந்த பெண் பாதசாரி மயக்கமடைந்தார். அதனை அடுத்து, அவர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

பின்னர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 69 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன.

சம்பவத்தின் புகைப்படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டன.

கொரோனா: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய பாதிப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…