சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெற்ற ஜீ தமிழ் “தமிழா தமிழா” நிகழ்ச்சி சர்வதேச அளவில் சென்றடைந்தது!

'Thamizha Thamizha' Reality Show goes international in Singapore!

ஜீ தமிழ் தொலைக்காட்சி புகழ் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு தற்போது சிங்கப்பூரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் வாழும் சுமார் 350,000 க்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தற்போது தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை விரிவு படுத்தியுள்ளது. இதற்கு ஜீ தமிழ் ஏற்படுத்திய முயற்சியின் வெளிப்பாடு தான் காரணம் என்று கூற வேண்டும்.

“தமிழா தமிழா” விவாத நிகழ்ச்சி சாமானியர்களைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து அதை முடித்து காட்டுவதே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக இந்தியா பலதரப்பட்ட பிரச்சினைகளை சந்தித்துள்ளது. அவற்றை கருப்பொருளாக கொண்டு நடத்தப்படும் இந்த ரியாலிட்டி ஷோ, சர்வதேச அளவில் சென்றடைய சிங்கப்பூர் சர்வேதேச அரங்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது.

கடந்த வாரம் முதல் தடவையாக இந்த நிகழ்ச்சி 500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளரும், பிரபல திரைப்பட இயக்குநரும், நாடக ஆசிரியரும், நடிகருமான திரு கரு பழனியப்பன் தொகுத்து வழங்கினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பேச்சாளர்கள் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சி , வரும் ஜூலை மாதம் ஜீ தமிழ் சிங்கப்பூர் feed இல் ஒரு மணி நேர சிறப்பு ஒளிபரப்பு செய்யப்படும்.

பல்வேறு சமூக தலைவர்கள் மற்றும் இந்திய அமைப்புகள் வாயிலாக இந்த நிகழ்ச்சி பாராட்டையையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

Related posts