சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கழகம்

‘தமிழ்க் குடும்பங்களில் பேச்சு மொழியாக தமிழே இருக்க வேண்டும்.

நம் இளையர் சமுதாயம் தமிழிலேயே அதிகம் பேச வேண்டும்’

என்பது சிங்கப்பூர் அரசின் விருப்பமாக உள்ளது.

இயற் றமிழ், இசைத் தமிழ். நாடகத் தமிழ் ஆகிய முத்தமிழையும் உள்ளடக்கி, பேச்சுத் தமிழின் அவசியத்தை தமிழ் இல்லங்களுக்கு கொண்டு சேர்த்து, இளைஞர் சமுதாயத்துக்கு தமிழில் பேசும் ஆவலைத் தூண்ட பட்டிமன்றங்களால் முடியும் என்பது அனுபவ உண்மை.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது இந்த நோக்கத்தை அடைவதற்காகவே.

2009 ஏப்ரலில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 2013 ஏப்ரலில் தன் 75வது நிகழ்ச்சியை நடத்தி யிருக்கிறது. விஜய் தொலைக்காட்சிப் புகழ் கோபிநாத் அவர்களால் நடத்தப்பட்ட இந்த 75வது நிகழ்ச்சி 2013 தேசிய நாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 9.30க்கு வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்பப்பட்டது தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்

பேச்சுக் கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்பளிப்பது, புதிதாக பேச விரும்புபவர்களுக்கு உரிய வாய்ப்புக்களை உருவாக்குவது, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக இதில் ஈடுபடுத்துவது ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.