SARS நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தாண்டிய கொரோனா வைரஸ் உயிரிழப்புகள்…!

Coronavirus death
Coronavirus death toll in China rises above 800 (Photo: REUTERS/Aly Song)

Coronavirus death : சீனாவில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 37,198-ஐ எட்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 2,600-க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை ஓட்டுநர்கள் உட்பட 7 புதிய கொரோனா வைரஸ் சம்பவம்…!

இந்த கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 811-ஐ தாண்டியுள்ளது.

இதில் 2002-2003ஆம் ஆண்டில் 774 பேரைக் கொன்ற SARS எண்ணிக்கையை விட தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் நோயால் கண்டறியப்பட்ட 60 வயதான அமெரிக்க குடிமகன் கடந்த வியாழக்கிழமை வூஹானில் இறந்தார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆரஞ்சு DORSCON எச்சரிக்கை நிலை; அரசின் வேண்டுகோள் என்ன..?

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு ஜப்பானியரும் வூஹானில் உள்ள மருத்துவமனையில் இறந்தார் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தச் சிரமப்படும் சீனா, ஹூபெய் மாநிலத்தில் சுமார் 56 மில்லியன் பேரைத் தனிமைப்படுத்தியுள்ளது.

மேலும், அங்கு போக்குவரத்துத் தடை இன்னும் நடப்பில் உள்ளது.