சிங்கப்பூரில் பேருந்துகளில் இலவச வை-ஃபை வசதி; எப்படி பயன்படுத்துவது தெரியுமா.?

SBST TRANSPORT free Wi-Fi

சிங்கப்பூரில் SBST TRANSPORT பேருந்துகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக வைஃபை (Wi-Fi) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும் போது, உங்கள் மொபைலில் வைஃபை Setting-க்குள் சென்று, Refresh அல்லது Search ஆப்ஷனை கிளிக் செய்தால் #FreeWiFi@SBST என்ற சேவை தொகுப்பு அடையாளம் (SSID) தோன்றும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 1.3 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் பறிமுதல்; 5 பேர் கைது..!

அதனை கிளிக் செய்தவுடன் மொபைலில் வைஃபை வசதியை பயன்படுத்தலாம். இதற்கு எந்தவித ரகசிய எண்ணும் இல்லை.

மேற்கண்ட வைஃபை வசதியை “இலவச வைஃபை” என்கிற ஸ்டிக்கர் ஒட்டிருக்கும் பேருந்துகளில் மட்டுமே பயன்படுத்தமுடியும்.

இதையும் படிங்க : 2020 சீன புத்தாண்டு கொண்டாட்டம்; சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுமா.?

மேலும், அனைத்து பேருந்துகளிலும் இந்த இலவச வைஃபை சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.