உழைப்பால் உயர்ந்த ‘முஸ்தபா சென்டர்’ அதிபர் திரு. முஸ்தாக் அஹமது அவர்கள் கடந்து வந்த பாதை.!

சிங்கப்பூரில் தொழில் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே அனைவரையும் ஈர்க்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் கண்ட மனிதர் முஸ்தபா அவர்கள் ஆவார்கள்.

தன்னுடைய முதல் ரெடிமேட் ஆடையகங்கள் கடையை சிங்கப்பூரில் 1971 ஆம் ஆண்டு லிட்டில் இந்தியாவில் Champhell Lane பகுதியில் நிறுவினார். பிறகு 1973 ஆம் ஆண்டு செரங்கூன் பகுதியில் 900 சதுர மீட்டர் பரப்பளவில் கடையை வாடகைக்கு எடுத்து அதில் எலக்ட்ரானிக் பொருட்களை சேர்த்தார். அடுத்ததாக இந்த கடைக்கு அருகிலேயே இன்னொரு கடையை வாடகைக்கு எடுத்து வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் கிடைக்கப்பெறும் பொருட்களை உள்ளூரிலேயே கிடைக்க வழிவகை செய்தார்.

1985 ஆம் ஆண்டு அரசாங்கம் பாதுகாப்பு நலன் கருதி கடைகளை கைப்பற்றியது. அதன் பின்னர் முஸ்தாக் அஹமத் அவர்கள் செரங்கூன் பிளாசாவில் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் கடையை கட்டினார்.

1995 ஏப்ரல் மாதம் முஸ்தபா சென்டர் நம்பகத்தன்மை மற்றும் உடனடி சேவை என்ற நற்பெயருடன் பலதரப்பட்ட மக்களுக்கு Shopping சொர்க்கம் ஆனது. வார இறுதியில் இந்த ஸ்டோர் 15000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன் வசம் கட்டிப்போட்டது.

இன்று, வாடிக்கையாளர்கள் 3 லட்சத்திற்கும் அதிகமான பொருட்களை இந்த ஸ்டோரில் வாங்கும் அளவிற்கு 4 லட்சம் சதுர அடியில் Syed Alwi சாலையில் அமைந்துள்ளது.

மது, குட்கா, பான்பராக் மற்றும் புகையிலைக் கொண்டு தயாரிக்கும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களும் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் உருவாக்கி சாதனைப்படைத்தவர் இவர் ஆவார்.

சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களது குடும்பங்களில் ஒளியேற்றி வரும் “முஸ்தபா” பேரங்காடி குழுமங்களின் அதிபர் திரு முஸ்தாக் அஹ்மது பிறப்பு 8 June 1951 (age 68 years), அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

நன்றி: சிங்கப்பூர் அ.ஜாகீர் உசேன்.