சிங்கப்பூர் குடியிருப்புகளில் தொந்தரவு செய்யும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க எளிய வழிமுறைகள்..!

Bed Bug Natural Home Remedies

நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மறைந்திருக்கும் ​​மூட்டை பூச்சி வெளியே வந்து உங்களைத் தாக்கும், உதறிவிட்டு படுத்தாலும் அவை மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்யும். இது சிங்கப்பூர் குடியிருப்புகளில் தொழிலார்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று.

மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன.

பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்பமண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை.

மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை.

இப்படிப்பட்ட தொல்லைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற கேள்வி உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கும், வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே இதற்கான தீர்வுகளை சுலபமாக காணலாம்.

தேயிலை மர எண்ணெய்:

தேயிலை மர எண்ணெய் என்பது ஆண்டிமைக்ரோபையல் பண்புகள் மற்றும் புதிய மணம் கொண்ட அத்தியாவசிய எண்ணெயாகும். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் அழிக்க பேருதவி செய்கிறது.

லாவெண்டர்:

லாவெண்டர் வாசனை இருக்கும் இடங்களில் மூட்டைப் பூச்சிகளால் வாழ முடிவதில்லை. அதனால் லாவெண்டர் பெர்ஃப்யூமை பயன்படுத்துங்கள் அல்லது உடைகளின் மீது லாவெண்டர் செடியின் இலைகளை தேய்த்துக் கொள்ளவும்.

புதினா:

புதினா இலைகளின் வாசனை என்றால் மூட்டைப் பூச்சிகளுக்கு ஆகவே ஆகாது. அதனால் அவைகளை நீக்க இதனை பயன்படுத்தலாம். கொஞ்சம் புதினா இலைகளை எடுத்து, நீங்கள் தூங்கும் பகுதியில் வைத்துக் கொள்ளவும். குழந்தை தூங்கும் தொட்டிலிலும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்.

மூட்டைப்பூச்சிகள் விரட்டியாக இந்த புதினா இலைகள் செயல்படும். உங்களுக்கு ஏதுவாக இருந்தால், உங்கள் சருமத்தின் மீதும் கொஞ்சம் இலைகளை தேய்த்துக் கொள்ளலாம்.

கருப்பு வால்நட் தேநீர்:

தேநீர் தயார் செய்ய உதவும் கருப்பு வால்நட் மரத்தில், பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி தாக்கங்கள் உள்ளதால், மூட்டைப்பூச்சிகள் பிரச்சனையை கையாள இதனை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தப்பட்ட கருப்பு வால்நட் மரத்தின் தேநீர் பைகளை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வைத்து விடவும். இது மூட்டைப்பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் கொன்று விடும்.

குறிப்பு: உங்கள் செல்லப் பிராணிகளுக்கு அருகில் இந்த பைகளை வைக்காதீர்கள்.

தைம்:

தைம் என்பது புகழ்பெற்ற இத்தாலிய மூலிகையாகும். உணவுகளுக்கு சுவைமணம் அளிக்கவும், இனிமையான வாசனையை அளிக்கவும் இது முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மூலிகை மூட்டைப்பூச்சிகளின் மீது நேரடியாக செயல்படாது. ஆனால் இதன் வாசனை அவைகளுக்கு வெறுப்பூட்டும் வகையில் இருக்கும். இதனால் இடத்தை அதுவாகவே காலி செய்து விடும்.

நற்பதமான தைம் இலைகளை வலை பைகளில் போட்டு கொள்ளவும். இந்த பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் போடவும்; மெத்தைகளுக்கு கீழ், அலமாரிகளுக்கு கீழ், சோஃபா குஷன்களுக்கு கீழ், திரைகளுக்கு அருகில். இதனால் மறைந்திருக்கும் இடங்களை விட்டு மூட்டைப்பூச்சிகள் தானாகவே ஓடி விடும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த வலை பை சிகிச்சையை தொடரவும்.

வசம்பு (Sweet Flag):

ஸ்வீட் ஃப்ளாக் என அழைக்கப்படும் மூலிகையான வசம்பை ரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லியில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த மூலிகையில் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் அடங்கியுள்ளதால் மூட்டைப்பூச்சிகள், புழுக்கள் மற்றும் பேன் முட்டைகள் போன்ற நுண்ணுயிர்களை எதிர்த்து இந்த மூலிகை சிறப்பாக செயல்படும்.

ஒரு பெரிய பாக்கெட் வசம்பு பொடியை வாங்கி, அந்த பாக்கெட்டில் உள்ள வழிகாட்டல் படி, அதனை நீருடன் கலந்து கொள்ளவும். இந்த பூச்சிக்கொல்லியை வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்யவும். இதனால் மூட்டைப்பூச்சிகள் முழுமையாக நீங்கும். இதனை உட்கொள்ள வேண்டாம்.

கிராம்பு:

கிராம்பு எலுமிச்சைப் பழத்தைப் போலவே செயல்படுகிறது. இந்த மூட்டை பூச்சை தடுக்க நீங்கள் கிராம்பு எண்ணெயை மெத்தை மற்றும் தலையணைகளில் வைக்கலாம்.

பீன்ஸ் இலைகள்:

மூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு தான் பீன்ஸ் இலைகள். பூச்சிகளை விரட்ட பழமையான காலம் முதல் இந்த இலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போதைய மக்களுக்கு இதன் பயன்கள் தெரிவதில்லை.

இந்த இலைகள் மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கும் என புதிய ஆராய்ச்சி ஒன்று உறுதி செய்துள்ளது. இந்த இலைகளில் உள்ள ரோமங்கள் இந்த பூச்சிகளை கொல்ல உதவுகிறது.

வேப்ப எண்ணெய்:

இந்தியாவின் வட பகுதிகளில் அதிகமாக காணப்படும் வேப்ப மர இலையில் இருந்து தயாரிக்கப்படுவதே வேப்ப எண்ணெய்.

மூட்டைப்பூச்சிகள் உட்பட பல நுண்ணிய உயிரினங்களை அழிக்க, நுண்ணுயிர் எதிர்ப்பி செயல்களுக்காக நன்றாக அறியப்படும் இந்த மரம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.