விமானத்தை தாக்கும் மின்னல்; வெளியான அதிர்ச்சி காணொளி..!

எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு A380 ஏர்பஸ் விமானம் ஒன்றின் மீது மின்னல் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன

நியூஸிலாந்தின் கேண்டர்பரி பகுதியில், இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், க்றிஸ்ட் சர்ச் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான A380 ஏர்பஸ் விமானம் ஒன்றின் மீது மின்னல் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த காட்சியை டேனியல் க்யூரி என்ற விமானி தனது மொபைலில் படம்பிடித்ததோடு அதை சமூகவலைதளத்தில் “The view out our window onto the tarmac today! The Emirates plane waiting for the storm to pass…” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை, பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று மற்றொரு விமானி பில்லி ஹேம்மெட் தெரிவித்துள்ளார்.