360 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தின் எஞ்சினில் பற்றிய தீ; அதிர்ச்சி காணொளி!

Engine fire on Boeing 777 flight forces emergency landing

பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் போயிங் 777-300ER லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், விமானத்தின் GE90 இயந்திரத்தில் தீப்பிழம்புகள் வெளியானது, இதனை அடுத்து, ​​விமானக் குழுவினர் விமானத்தை அவசர அவசரமாக திருப்பினர்.

RP-C7775 விமானம், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து மணிலாவுக்கு 342 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது, இந்த சம்பவம் ஓடுபாதை 25Rல் வெளியே ஏறும் போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

சரியாக புறப்பட்ட பன்னிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது, மேலும் விமான நிலைய தீயணைப்பு சேவைகள் தயார் நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தீப்பிழம்புகள் வெளியாகும் காட்சியை ஒரு பயணி பார்த்து, அதனை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பயணிகள் அல்லது பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.