வூஹான் கிருமித் தொற்று – நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

precautions of corona virus

உலகை அச்சுறுத்தி வரும் இந்த வூஹான் “கொரோனா” வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இந்த கிருமி தொற்று நான்கு பேருக்கு இருப்பது சுகாதார அமைச்சகத்தால் (MOH) உறுதி செய்யப்பட்டது, அவர்கள் அனைவரும் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் MOH தகவல் கூறியுள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ் குறித்து பரவிய வதந்தி; பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்…!

இந்நிலையில் இதற்கான நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை குறித்து காண்போம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • கோழி, பறவைகள் உள்ளிட்ட உயிருள்ள விலங்குகளுடனான தொடர்பைத் தவிர்க்கவும்.
  • பதனிடப்படாத மற்றும் முழுமையாக சமைக்கப்படாத மாமிச வகைகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
  • உடல் நலம் குன்றிய அல்லது நோய்க்கான அறிகுறி உடைய நபர்களுடனான நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
  • தனி நபர் சுகாதாரத்தைப் பின்பற்றவும்.
  • கைகளை அடிக்கடி சோப்புகளை பயன்படுத்தி கழுவவும் (எ.கா. உணவைக் கையாள்வதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன்னர், கழிவறைக்குச் சென்ற பின்னர் அல்லது இருமல், தும்மல் முதலிய செயல்களுக்குப் பின்னர் வெளியாகும் சுவாசச் சுரப்பியால் கைகள் அசுத்தமாகும் போது)
  • இருமல் அல்லது சளி போன்ற சுவாசப் பிரச்சனைகள் இருக்கும்போது, முகக் கவசம் அணிந்து கொள்ளவும்
  • இருமும் போது அல்லது தும்மும் போது, ஒரு மெல்லிழைத் தாளைக் (tissue paper) கொண்டு, உங்கள் வாயை மூடிக்கொள்ளவும்; உடனடியாக, அந்தத் தாளைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிடவும்.
  • நீங்கள் உடல் நலமின்றி இருந்தால், உடனடியாக, மருத்துவ உதவியை அணுகவும்.

தகவல்: தமிழர் பேரவை சிங்கப்பூர்

இதையும் படிங்க : மர்மமான வூஹான் வைரஸ்; சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார ஆலோசனை..!