Rasi Palan 13th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th September 2019: இன்றைய ராசிபலன்
Rasi Palan 13th September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 13th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் மைக்செட் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 13th September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 13, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பணியிடத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கும் நாள். விலையுயர்ந்த பொருள் காணாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம். ஓய்வு எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். சுய விவகாரங்களில் தனித்தன்மையுடன் இருக்க முயல்வீர்கள். எத்தகைய சவால்களையும் திறம்பட முறியடிப்பீர்கள். பாதுகாப்பாக இருப்பதாக உணர்வீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மன சஞ்சலத்தால் அவதிப்படுவீர்கள். மற்றவர்கள் உங்களைப்பற்றி தவறான அபிப்ராயம் கொள்வர். பலமுனை தாக்குதல்களால் அவதிப்படுவீர்கள். நிதானம் காப்பது நல்லது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

யாரும் எப்போதும் நல்லவனாக இருக்கமுடியாது என்பதை உணர்வீர்கள். உடனடி முடிவுகள் சிலநேரங்களில் மட்டுமே சாதகமான பலன் தரும் என்பதை மறந்துவிடவேண்டாம். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மற்றவர்களின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மறைமுக செலவுகள் ஏற்படும் என்பதால் நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிட்டும். நண்பர்கள், உறவினர்கள் நட்பு பாராட்டுவர். விருந்து, விசேஷங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சமூக விவகாரங்களில் அதிக அக்கறை கொள்வீர்கள். உங்களின் தொழில்முறை பங்குதாரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அந்தரங்க விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். தியானம் செய்வதனால் மனஅமைதி கிட்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உறவுமுறையில் சுணக்கம் மற்றும் விருப்பங்கள் மாறி மாறி வரும். ஒருநொடி மகிழ்ச்சியாக இருந்தால், அடுத்த நொடியே பகையாளியாக மாறும் நிலை ஏற்படும். உடல்நலத்தில் அதிக கவனம் வேண்டும். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்புர்றது போல வாழ்க்கையில் இருப்பீர்கள். சரியான தயார்முறை இல்லையென்றால் தோல்வி உறுதி என்பதை மறந்துவிட வேண்டாம். தொலைநோக்கு பார்வைகளை விலக்கிவைப்பது நல்லது. மற்றவர்களுக்காக சில பொறுப்புகள் ஏற்க நேரிடும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தடை தாமதங்களால் அல்லல்படுவீர்கள். எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. மனஅமைதியுடன் இருப்பது நல்லது. குழந்தைகள் மற்றும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணவரவு திருப்தியாக இருக்கும். நிதிவிவகாரங்களில் மேன்மையான சூழல் நிலவும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களுக்கு தந்த வாக்கினை நிறைவேற்றுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

புதிய நட்பால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.