Rasi Palan 18th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 18th September 2019: இன்றைய ராசிபலன்
Rasi Palan 18th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 18th September 2019 in Tamil : கேட்பதை வைத்து எதையும் நம்ப முடியாது. பார்ப்பதை வைத்தும் எதையும் நம்ப முடியாது. பேசுவதை வைத்தும் நம்ப முடியாது. அந்த இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணம். அவனே நம்பிக்கை. அவனை எல்லை.

Rasi Palan 18th September 2019 : இன்றைய ராசி பலன் 18th September 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சந்திரன் உங்களுக்கு சாதகமாகத் தான் உள்ளது. ஆனால், மற்ற கிரக நிலைகளின் அமைப்புகளால் இன்று நிச்சயமற்ற நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதி தேவை. சில தடுமாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களிடம் இருந்து முட்டாள்த்தனமான ஐடியாக்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி சென்றுக் கொண்டே இருங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீங்கள் எதிர்பார்த்த தருணங்கள் வந்து சேரும். வெற்றிகரமான நாள் இது. உங்கள் திட்டங்கள் செயல் வடிவமாக மாறும் தினம் இது. கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்ததால், பக்குவத்துடன் செயல்பாடுகளை அணுகுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

விவாதங்களும், பிரச்சனைகளும் உங்களை சுற்றி சுற்றி வரும். அதனை தவிர்க்க வேண்டியது அவசியம். சுயக்கட்டுப்பாடு என்பது உங்களுக்கு தேவை. முக்கியமாக, இன்றைய தினம் அமைதியை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சூரியன் உங்களுக்கான வெற்றியை கொண்டு வரும். ஆனால், சிறிது தடுமாற்றம் இருக்கும். சுய ஆர்வம் கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களை முன்னேற வைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதை விடாப்பிடியாக நின்று பெற வேண்டியது உங்கள் கடமை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெற்றிகரமான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களை சுற்றி பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும். அது உங்கள் செயல்பாடுகளை நகர்த்திச் செல்லும். உங்கள் எண்ணங்களே உங்களது முடிவாக இருக்கும். உங்கள் துணைக்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும், உங்கள் கருத்தில் உறுதியாக இருப்பீர்கள். துணிச்சல் உங்களின் பலம். நேர்மையான அணுகுமுறை உங்களை கௌரவமான இடத்திற்கு கொண்டுச் செல்லும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உடல் நலத்தில் அக்கறை தேவை. குடும்பத்தில் அன்பை விதைக்க முயற்சி செய்யுங்கள். காதல் கைகூடும். வெளிநாடுகளில் வேலைக்கு ஏற்பாடு செய்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். செயல்கள் சுமுகமாக நடைபெற அனுசரித்து நடக்க வேண்டும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நின்று, நிதானமாக கவனிக்க வேண்டிய நாள் இன்று. உங்கள் முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடுங்கள். அப்போது தான் அது மதிப்பு பெறும். குடும்பம் முதல் ஆரோக்கியம் வரை கவனமாக இருக்க வேண்டும்.